இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ.சலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சர்ச்சைக்குரிய தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கள சோதனைகளை நடத்த இந்திய பதிவாளர் ஜெனரல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. பொது மக்கள் தங்கள் சக குடிமக்களின் குடியுரிமை உரிமைகளை அவர்களின் மதத்தின் காரணமாக பறிப்பதை விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிரான சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர், என்.ஆர்.சி.யின் செயல்முறைக்கு எதிராக கடந்த ஒரு வருடம் முன்பு வீதிகளில் இறங்கினர். பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் இதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தன, பல மாநில அரசுகள் இச்சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றின.
நாடு தழுவிய என்.ஆர்.சி.க்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் மோடி பகிரங்கமாக கூறினாலும் என்.பி.ஆர்.க்கான நடவடிக்கை என்பது அவரது வார்த்தைகளை நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது. என்.பி.ஆர்., என்.ஆர்.சி உடன் இணைக்கப்படவில்லை என்று பாஜக கூறினாலும், உண்மையில், தேசிய மக்கள் தொகை பதிவு நாடு தழுவிய என்.ஆர்.சி.க்கு முக்கியப் படியாக அமைகிறது. ஏனெனில் என்.பி.ஆர். மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் என்.ஆர்.சி. தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக கடந்த ஒரு வருடம் முன்பு போராடிய அனைத்து மக்களும், போராட்டத்தை ஆதரித்த கட்சிகளும், மாநில அரசுகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது போன்று, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக வழிமுறைகளிலும், மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத முயற்சிகளை எதிர்க்க முன்வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment