மனித அபிவிருத்தி தாபனம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தும்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான பிரதேச செயலக மட்டத்திலான தெளிவுபடுதல் கூட்டம் கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர்எம். ஐ. றியால் நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்எம். ஐ. சமீர் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.
இக் கூட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகவாழ்வு சங்கங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

0 comments :
Post a Comment