பிரதிப் பணிப்பாளராக பதவியுர்வு பெற்ற பஷீர் அப்துல் கையூம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான பிறை எப்.எம். வானொலியின் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதிப்பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ள பஷீர் அப்துல் கையூமை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மெங்கோ காடன் வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (04) சிறப்பாக இடம்பெற்றது.
பிறை எப்.எம். வானொலியின் வர்த்தக முகாமையாளரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான கவிஞர் எஸ். ரபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் குடும்ப சகிதம் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ஆசிரியரும் பிறை எப்.எம். அறிப்பாளருமான ஜே.வஹாப்தீன் எழுதிய 'வாழ்த்துப் பா' நிகழ்வில் வாசிக்கப்பட்டு, அவரிடம் கையளிக்கப்பட்டதுடன் பிறை எப்.எம். அறிவிப்பாளர்களினால் அவரது திறமையான சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

பிறை எப்.எம். வானொலி உத்தியோகத்தர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :