ஊவா மாகாணசபையின் ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகள் ஷஸ்னா இங்கிலாந்து தோ்தலில் போட்டி



அஷ்ரப் ஏ சமத்-
வா மாகாணசபையின் ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு

அவா் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2021 மில்டன் கெய்ன்ஸ் உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிடுவதற்கு வேட்பாளராகத் தெரிபு செய்யப்பட்டுள்ளாா். எதிா்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிருவதற்கு கன்சாவேடிங் கட்சியினால் இவரது பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பிளச்சிலி கிழக்கு, டென்பிக் கிழக்கு ஸ்ட்ராட்போட் வோட்டேசன், லேக் கிழக்கு,நியுட்டன் லேஸ் போன்ற பிரிவுகள் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி வாழ் வாக்களாா்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இங்கிலாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள எம்.பி.ஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஷம்மில் திறந்த பல்கலைக்கழகம் சமுக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பிணராக இருந்து வயதுவந்தவா்களுக்கு உதவுதல், கெயினாஷ் இளைஞா் அமைப்பு,ஊடாக சிறுவா்கள் சிறையில் உள்ள பெற்றோா்கள் அவா்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமுக சேவைகளைச் செய்து வருகின்றாா். அத்துடன் லண்டனில் கொவிட் 19 தொற்று நோய் சம்பந்தமான சுகாதார சங்கத்தில் இணைந்து வக்சின் வழங்கும் நிறுவனத்தின் தொண்டராகவும் அங்கு பணிபுரிந்து வருகின்றாா்.

அயலவர்களின் நிலைமையினை மேம்படுத்துவதற்கு சிறிய மற்றும் பாரிய உள்நாட்டு வா்த்தகத்திற்கு உதபுவவா். இலங்கையில் கொழும்பு 7 ல் உள்ள மகளிா் கல்லுாாியில் ஆங்கில மொழி மூலம் கல்விகற்றவா், கொழும்பு மாநகர சபையில் அவரது தந்தை முஸம்மில் மேயராக இருந்த காலத்தில் அவரது பிரத்தியோக செயலாளராக கடமையாற்றினாா். அத்துடன் இலங்கை பெண்கள் வியாபார அமைப்பின் 2018 பணிப்பாளா் சபை உறுப்பிணராகவும் கடமையாற்றியுள்ளாா். அமேரிக்க அமைப்பான வியாபார அமைப்பொன்றின் துாதுவர் பதவியையும் வகித்துள்ளா். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பாராளுமன்றத் தோ்தல் காலத்தில் இலங்கை வந்து பிரச்சார பணிகளையும் மேற்கெண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :