தொழில் முயற்சி ஆற்றல் நேர்முகப் பரீட்சை...

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதலாவது நாளான இன்று திங்கட்கிழமை தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மட்டக்களப்பு காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 1143 நபர்களுக்கு தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர்முகப் பரீட்சை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் இடம்பெறும் என பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :