காரைதீவில் வர்த்தகர் சங்கம் உருவாக்கப்படும் உள்ளுராட்சிமன்றங்களின் சம்மேளன முகாமையாளர் பிரதீப்

வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவுப்பிரதேசத்திற்கான வர்த்தகர் சங்கமொன்று புதிதாக உருவாக்கப்படும். அதனூடாக வர்த்தகர்கள் தமது வர்த்தகத்தை வளப்படுத்திக்கொள்ளமுடியும் என இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன சிரேஸ்ட வேலைத்திட்ட முகாமையாளர் பி.பிரதீப் தெரிவித்தார்.

காரைதீவுப்பிரதேசத்திற்கான வியாபாரஆலோசனைக்குழு அமைக்கும் வேலைத்திட்ட செயலமர்வு நேற்று விபுலாநந்தகலாசார மண்டபத்தில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றது.

காரைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
 அங்கு குழுநிலை கருத்துப்பரிமாற்றமும் சமர்ப்பணங்களும் நடைபெற்றன.
 வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட 41 கோரிக்கைகளுக்கு தவிசாளர் ஜெயசிறில் பதிலளித்துரையாற்றினார்.

இதுவரை காரைதீவில் இல்லாதிருந்த வர்த்தகர் சங்கம் இச்செயலமர்வு மூலமாக அமைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல் வடிகான் அமைப்பதற்கான மாஸ்ரர்பிளன் இதுவரை இல்லாதிருந்தது. அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

வாரஇறுதிச்சந்தையொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களைக்காப்பாற்றுவதற்கான சமுகமுடக்கத்தை வியாபாரத்திற்காக வேண்டாம் எனக்கூறமுடியாது. அதுபோல நடமாடும் வியாபாரிகளையும் தடுக்கமுடியாது.

எனினும் பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற வர்த்தகர்கள் நீங்கள். உங்களது வர்த்தகத்தை வளமாக்கவே இன்று கலந்துரையாடியுள்ளோம். அது வெற்றியளிக்கும் என்றார்.
சம்மேளனத்தின் திட்டஅலுவர்களான ஆர்.சதினி மற்றும் சி.அஞ்சனா ஆகியோர் செயமர்வை நெறிப்படுத்தினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :