கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி, இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியீடு – பா.உ.இஷாக் ரஹுமான்



கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம்களின் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்துவந்த நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உற்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கெதிராக குரல் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மிக நீண்டகால போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அரசு ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு அனுமதியளித்தமைக்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் பா.உ. இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :