காரைதீவு மக்கள் வங்கியில் மூன்று ஊழியருக்கு கொரோனா! உடனடியாக இழுத்து மூடப்பட்டது வங்கி: முகாமையாளர்அறிவிப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து (11) வியாழக்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருதுக்கிளைக்குச் சென்று தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாமென்ற முகாமையாளரின் அறிவித்தல் வங்கிமுகப்பில் தொங்கவிடப்பட்டுள்ளது.

காலை வங்கி இயங்கிக்கொண்டிருக்கையில் இம்முடிவு கிடைக்கப்பெற்றதும் அவசரஅவசரமாக வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி மூடப்பட்டது. குறித்த 3 ஊழியர்களையும் அனுப்பிவிட்டு ஏனைய ஊழியர்கள்மீதிகடமையை மேற்கொண்டனர்.

இது பற்றி வங்கி முகாமையாளர் தி.உமாசங்கரிடம் கேட்டபோது:

எமது கிளையில் நானுட்பட 16 உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவு இன்று வியாழக்கிழமை முடிவு கிடைத்தது.அதில் 3 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் தற்காலிகமாக மூடியுள்ளோம். பிராந்திய முகாமையாளரிடம் அறிவித்துள்ளேன்.அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி பின்னர் அறிவிக்கப்படும். என்றார்.

இதுதொடர்பில் காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்மா பஷீரிடம் கேட்டபோது கடந்த இருதினங்களுக்கு முதல் காரைதீவிலுள்ள சகல வங்கிகளுக்கும் சென்று பிசிஆர் சோதனையை மேற்கொண்டோம். அதன்முடிவுகள் இன்று காலை வந்து சேர்ந்தன. அதன்படி மக்கள்வங்கியில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு பொசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காரைதீவு மற்றும் சாய்ந்தமருதைச்சேர்ந்த இரு ஆண் ஊழியர்களுக்கும் அட்டாளைச்சேனையைச்சேர்ந்த பெண் ஊழியருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து வங்கியை மூடியுள்ளோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :