சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற பீடதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கருக்கு கௌரவிப்பு விழா.



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற கலை,கலாசார பீடத்தின் பீடதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி பல்கலைக் கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர்; கூடத்தில் (2021.02.24) நடைபெற்றது.

கலை, கலாசார பீடத்தின் அரசியல் துறை திணைக்களத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாசீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இங்கு பேராசிரியராக உயர்வு பெற்ற கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. விஷேடமாக இவ்நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கடந்து வந்த வரலாறுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், முதன்மை பேராசிரியர்களான எம்.ஐ.எம்.கலீல், றமீஸ் அப்துல்லா, தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி யூ.எல்.அப்துல் மஜீட், நூலகர் எம்.எம்.றிபாய்தீன், வேலைப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஸீல் உட்பட திணைக்கள தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் அணியினர், நிர்வாக உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.






























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :