ஈழத்துபழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம்க.கிஷாந்தன்-
ழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம் இன்று (19.01.2021) நடைபெற்றது.

பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான பிரதமகுரு குருக்கள் தலைமையில் (18.01.2021) மாலை கணபதி ஓமம் நடைபெற்று, இன்று (19.01.2021) காலை நடைதிறக்கப் பட்டு, கும்ப பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது.
தொடர்ந்து புனித நீர் கோபுரத்திற்கு ஊற்றப்பட்டது. பின்னர் முருகனுக்கு சங்கு நீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், நடைபெற்றது.

தொடர்ந்து மாலை மும்மூர்த்திகள் உள்வீதியுலா இடம்பெறும். கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இந்த வருஷாபிஷேகம் குறிப்பிட்டளவு பக்தர்களுடன் நடைபெற்றது.

முக கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பக்தர்கள் ஸ்ரீ தண்டாயுதபாணி அருள் வேண்டி பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :