புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்க கூடாது! பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி பேட்டி!!


பி.எஸ்.ஐ.கனி-

புதுச்சேரி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் காரைகாலில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்குவதாக கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கும் விதமாக மின்துறை ஊழியர்களின் தற்போதைய போராட்டம் நியாயமானது. இத்தகைய போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் துணை நிற்கும். 

மாநில அரசின் ஒப்புதல் இன்றி இவ்வாறு மத்திய அரசின் சர்வாதிகார முடிவுகளால் நடைமுறை படுத்துப்படும் செயல்களை ஒரு காலமும் மக்கள் ஏற்று கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது,

இளைஞர்களை தவறான வழியில் அழைத்து சென்று அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் போதை பொருளான கஞ்சா காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையை காரைகால் காவல்துறை அதிரடி நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும்.

தற்போது புதிய வகை கொரோனா பரவல் கால கட்டத்தில் புதுச்சேரி மாநில அரசு பள்ளியை 04.01.2021 முதல் மீண்டும் திறக்க அரசானை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் இத்தகைய விபரீத முடிவுகள் பள்ளி மாணவ, மாணவிகளின் உயிர் விசயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதை போல் தெரிகிறது. கல்வி அவசியம் என்பதை போல் உயிரும் அவசியம் என்பதை அரசு உணர்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அரசின் இத்தகைய முடிவை திரும்ப பெற வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாநில அரசின் உரிமைகளை மீட்கும் போராட்டமாக GoBackBedi என்ற தொடர் போராட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் தொடர் போராட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்தி வரவேற்கிறது. மத்திய அரசு உடனடி போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மண்டல தலைவர் அமீர் பாஷா மற்றும் மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபிக் ஆகியோர் உடனிருந்தார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :