மொனராகலையில் COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கு நடமாடும் பரிசோதனை தொகுதியை நன்கொடையளிக்கும் அமெரிக்காகொழும்பு, ஜனவரி 13: இலங்கையில் COVID-19 இற்கு எதிராக போராடும் மற்றும் முன்கூட்டிய கண்டறிதல் ஊடாக உயிர்களை காக்கும் முயற்சியின் அங்கமொன்றாக மொனராகலையிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகளுக்கு நடமாடும் பரிசோதனை தொகுதியொன்றை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதை டாக்டர். பி.எம்.சி. தசநாயக்க பெற்றுக்கொண்டார்.
இந்த நடமாடும் தொகுதியானது பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் என்பதுடன், இந்த தொற்றுநோய் பரவலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை சமூகங்களில் நாளாந்தம் 100 பேருக்கு முக்கிய சுகாதார சேவைகளையும் வழங்கும். இந்த நடமாடும் தொகுதியானது நேரடி தொடர்பை தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்பான மாதிரி சேகரிப்புக்கு உதவும் என்பதுடன், எதிர்காலத்தில் டெங்கு உள்ளிட்ட ஏனைய தொற்று நோய்களை சோதிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.
COVID-19 சோதனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஏனைய சேவைகளை கிராமிய சமூகங்களுக்கு அடையக்கூடியதாக செய்வதன் மூலம், இந்த தொற்றுநோய் பரவலினால் ஏற்படும் கடுமையான மனித மற்றும் பொருளாதார இழப்புகளில் சிலவற்றை தணிப்பதற்கு அமெரிக்கா உதவுகிறது,' என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் அபிவிருத்தி பிரிவான சர்வதேச அபிவிருத்திகான அமெரிக்க முகவரமைப்பு (USAID) அதனது சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க திட்டத்தின் (Social Cohesion and Reconciliation project) ஊடாக இந்த அன்பளிப்புக்கு நிதியுதவியளித்துளள்து.

இலங்கையில் COVID-19 பரவலை குறைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் 6 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கியுள்ளது. ஆய்வுக்கூட முறைமைகளை தயார்படுத்துவதற்கும், நோயாளியை கண்டறிதல் மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்துவதற்கும், பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உதவுவதற்கும், இடர்நிலை பாதுகாப்பு தொடர்பாடலுக்கு உதவுதற்கும் மற்றும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை தீர்ப்பதற்கும் இந்த உதவியானது உதவுகிறது. மேலதிகமாக, அமெரிக்க உதவியானது COVID-19 இனால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக சேவைகளுக்கு உதவுவதுடன், சமூக ஒத்திசைவை ஏற்படுத்தவும் உதவுகிறது. அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை பலப்படுத்துவதன் மூலம் எதிர்மறையான பொருளாதார தாக்கங்களை மட்டுப்படுத்துவதுடன், பெண்களின் பொருளாதார பங்கேற்பையும் அதிகரிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :