மதுரையில் மத மோதலை உண்டாக்க பாஜக முயற்சி! மதவெறியை முறியடிக்க தமிழக மக்களுக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அழைப்பு.!பி.எஸ்.ஐ.கனி-
துரையில் திருப்பாலை பள்ளிவாசல் வழியாக பேரணியாக சென்ற பாஜகவினர், பள்ளிவாசல் மீது கற்களையும், செருப்புகளையும் வீசி தகாத வார்த்தைகளை பேசி அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தினர். பாஜகவினரின் இத்தகைய செயலுக்கு அகில இந்திய உலமாக்களின் அமைப்பான ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்ஷத் அஹ்மது அல்தாஃபி கண்டனம் தெரிவித்ததோடு, மத வெறியை தமிழக மக்கள் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேற்றுமையில் ஒற்றுமை என்ற முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டிவிடும் விதமாக பா.ஜ.க செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத வேறுபாடுகளைக் கடந்து தமிழகத்தின் தொன்மையான வரலாறுகளை நினைவுபடுத்தும் சமத்துவ பொங்கல் பெருவிழா நீண்டகாலமாக பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

ஆனால் மதக்கலவரத்தை நடத்தி தேர்தல் காலங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் எப்படியாவது காலூன்றவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வினர் தொடர் மத துவேஷ விஷமங்களை செய்து வருகின்றனர்.
வேல் யாத்திரை என்ற பெயரில் பொய் யாத்திரை நடத்தி தோல்வியடைந்தது போதாதென்று சமத்துவ பொங்கல் என்ற பெயரில் தமிழகத்தில் பல பாகங்களில் போலி பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்;அதன் தொடர்ச்சியாக மதுரை திருப்பாலை பள்ளிவாசல் வழியாக பேரணி சென்று, பள்ளிவாசல் மீது கற்களையும், செருப்புகளையும் வீசியதோடு,தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கோஷங்கள எழுப்பி 10.01.2021 அன்று மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்துள்ளனர்.
இங்கு மட்டுமல்ல; தமிழகத்தின் பல பாகங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களது ஃபாசிச மற்றும் மதவாத செயல் திட்டங்களை முறியடித்து இவர்களை எதிர்த்து களமாட வேண்டியது தற்போதைய தமிழகத்தின் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும்.

எனவே இந்த போராட்டக் களத்தில் தமிழக மக்களின் ஒற்றுமையையும், சமத்துவத்தையும் பாதுகாக்கும் விதமாக மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாத மோதல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நோக்கத்தோடு செயல்படும் இவர்களை தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு தடுப்பதுடன் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :