கிழக்கு மாகாண இலக்கிய விருது-2020



கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பாடல் ஆக்கப் போட்டியில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் தமிழ்ப் பாட ஆசானுமான எச்.எம்.ஹலால்தீன் (உலா வரும் கலா) இவ்வருடமும் வெற்றியும்
விருதும் பெற்றுள்ளார்
அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை முதலான மாவட்டங்களில் அரசாங்கத் திணைக்களங்கள் அரசாங்க நிறுவனங்களில் ஊழியர்களாகக் கடமையாற்றுபவர்களிடையே நடத்தப்பட்ட போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார்.

கிண்ணியாவின் முதலாவது தமிழ் விசேட துறை பட்டதாரியான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பாடத்தை விசேட துறையாகப் பெற்றுக் கொண்டார்.
அப்பல்கலைக்கழகத்திலேயே , முதுமாணிப் (MA) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் தமிழ்ப் பாட ஆசிரிய ஆலோசகராக (ISA) கடந்த எட்டு வருடங்களாகக் கடமையாற்றியுள்ளார்.
கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபகராகவும் , அதன் தலைவராகவும் கடந்த 24 வருடங்களாக செயற் பட்டு வருகின்றார்.

2013 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியப் படைப்புக்காக குருநாகலில் நடைபெற்ற தயட்ட கிருல(தேசத்துக்கு மகுடம் ) நிகழ்வின்போது
ஜனாதிபதி விருது விழங்கி கெளரவிக்கப்பட்டார்,

2018, 2019 ஆம் ஆண்டுகளில் புத்த சாசன கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய சிறுகதைப் போட்டியிலும், சிறுவர் இலக்கியப் படைப்பாக்கப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்

கிழக்கு மாகாணத்தமிழ் இலக்கிய விழா 2019, 2020களில் பாடலாக்கப் போட்டியில் கிழக்கு மாகாண விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

கிண்ணியா பிரதேச ஷாஹித்திய விழாவில் 2010, 2011, 2012, 2013, 2014 '2015,2016,2017, 2018,2019, 2020 தொடக்கம் இன்று வரை பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதேவேளை திருமலை மாவட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் வெற்றி கேடயங்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டு நாடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக "கிண்ணியா பிரதேச செயலகத்தினால் " அரங்கொளி" பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக (கம்மெத்த 2016) சக்தி TV கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தினால் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் (2018) சங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஊடகவியலாளருக்கான அமைச்சர் றிஷாட் பதூர் தீனிடம் விருதும் பொன்னாடையும் போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சிறந்த ஊடகவியலாளர் விருதையும் பெற்றுள்ளார்.
யுத்த காலத்தில் சிறந்த ஊடகவியலாளராகச் செயற்பட்டமைக்காக கிண்ணியா நிருபர் என்ற பெயரிலிருந்து திருமலை மேலதிக நிருபர் என்று பதவி உயர் பெற்ற முதலாவது ஊடகவியலாளர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

அகில இலங்கை சமாதான நீதிவானாக செயற்பட்டு வரும் இவர் 2018 ஆம் ஆண்டு தேச கீர்த்தி பட்டத்தையும் அகில இலங்கை சமாதான சங்கத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டர்.

சிறந்த தமிழ்ப் பாட ஆசானாகக்திகழும் இவர் "இரும்புக் கட்டிலும் இருதயத் தொட்டிலும் " என்ற கவிதைத் தொகுதியையும், திருகோணமலை மாவட்ட இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு" என்ற ஆய்வுகலையும் வெளியிட்டுள்ளார்.

வீரகேசரியில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். தினக்குரல், நவமணி, ஜனனி, சுடர் ஒளி முதலான பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பல கட்டுரைகளையும், சிறுவர் படைப்புக்களையும் இன்றும் எழுதி வருகின்றார்.
கிண்ணியா நிலா FM வானொலியின் பணிப்பாளராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
ஊடகத்துறை, நாடகத் துறை,விமர்சனம், கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடலாக்கம்,விவரணம் மட்டுமல்லாது பாடகராகவும், சிறந்த அறிவிப்பாளராகவும், பல் தேர்ச்சி தொண்ட
சகல துறை ஆட்டக்காராகவும் தன்னை உட்ப வித்துக் கொண்டுள்ளார்.

இவர் பெரிய கிண்ணியா 6ஆம் டிவி சனைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது, ரோஜா நோனா தம்பதிகளின் நான்காவது புதல்வரும் ஆவார்.
இவருக்கு கிழக்கு மாகாண விருது கிடைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :