கொவிட் 19 டெங்கு தடுப்பு செயலணிக்குழுக்கூட்டம்.


யாக்கூப் பஹாத்-

கொவிட் 19, டெங்கு பாதுகாப்பு தொடர்பான Covid-19,Dengue Divisional Steering Committee Meeting இன்று 2021.01.20 காலை 10.00 மணிக்கு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ காதர் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் TMM.அன்சார்,நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசல் பிரிநிதிகள்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதிநிதி,கோவில் பிரதிநிதிகள் மற்றும் நிந்தவூர் அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளத்தின் தலைவர் மற்றும் சமூக வேவை பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் அவர்கள் உரையாற்றுகையில் எமது பிராந்தியத்தில் உள்ள இரு முக்கிய பிரச்சினைகளாக கொவிட்-19 மற்றும் டெங்குவும் காணப்படுகிறது. கொவிட் மரணங்களை தடுக்க Risk Group களை அடையாளங்கண்டு அவர்களுக்குள் பரவல் ஏற்படுவதை தடுக்கமுகமாக மக்களுக்கு சுகாதார வழிமுறைகளை மீளவும் அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கொவிட்-19 மற்றும் டெங்குவினை ஒழிக்க மட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

#இதில்_பின்வரும்_விடயங்கள்_கலந்துரையாடப்பட்டு_முடிவுகள்_எடுக்கப்பட்டன.

01. 2021 ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களை டெங்கு,கொவிட்-19 மாதங்களாக கருத்திற்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

02. அனைத்து பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதலோடு,ஆசிரியர்கள் முகக்கவசம் (Face Shield) அணிதலை ஊக்கப்படுத்தலும். கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களின் முறையான கண்காணிப்புக்குட்படுத்தலும்.

03. முகக்கவசமின்றி வீதியில் நடமாடுபவர்கள் இனங்கண்டு பொலிசாரினால் சட்ட நடவடிக்கை எடுத்தல்.

04. சந்தை வியாபாரிகள் வியாபார நேரத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு முகக்கவசம் (Face Shield) அணிந்திருத்தலும் அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கண்காணித்தலும் ஊக்குவித்தலும்.

05. தொழுகை வேளைகளில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சுகாதார நடவடிக்கைகள் பொறுப்புதாரியாக இருத்தலும்.

06. பள்ளிவாசல்களில் கொவிட் 19 ,டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தினமும் ஒரு வேளை ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தல்.

07. நிந்தவூர்-21 ஆம் பிரிவின் டெங்கு கட்டுப்பாடுக்காக இன்றிலிருந்து பெப்ரவரி மாதம் கடைசி வரை Cotainer Collection‌ செய்வதற்கு USSO சமூக வேவை அமைப்பிடம் பொறுப்புக் கொடுத்தல்.

08. ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கிராமிய குழுக்களை ( Village Committee) அந்தந்த பிரிவில் கொவிட் 19 ,டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தல்.

09. பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் வாராந்தம் Container Collection மேற்கொள்ளல்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :