ஜனாஸா அடக்கத்துக்கு மாலைதீவில் இடமா?கண்டிக்கும் ஐக்கிய முஸ்லீம் சங்கம்..!


ஏ.எஸ்.எம்.ஜாவித் -

ம்பஹ மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் ஊடக அறிக்கை
எமது ஜனாஸாக்களை மாலை தீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் முடிவு எவ்வகையிலும் நடைமுறை சாத்தியமான விஷயமல்ல. 

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து ஆரம்ப காலத்தில் சுதந்திரதுக்காக பெரும்பான்மையினருடன் தோளோடு தோள் நின்ற எமது சமூகத்துக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல மனித உரிமை மீறலாகும்.

மேலும் சட்டரீதியாக இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரஜைகள் நாம் சகல விதமான வரிகளையும் நாம் இந்த நாட்டின் அரசாங்கதுக்கே செலுத்துகிறோம் அப்படி இருந்தும் எமது ஜனாஸாக்களை ஏற்றுமதி செயவது கண்டுக்ககூடியது மட்டுமல்ல நாட்டிற்கே வெட்க கேடான செயல். 

இதன் பின்னனியில் ஏற்றுமதி வியாபாரிகள் மறைந்திருக்கிரார்களோ என்ற சந்தேகமும் வருகிறது.
எமது மேதகு ஜனாதிபதி அவ்வாறு மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டிருப்பாரேயானால் அவ்வாரன செயல் முழு நாட்டையும் தலைகுனிய வைக்கும் முட்டாள் தனமான செயல்.

இதை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமல்ல பேரினவாத மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என
கம்பஹ மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம இதை வன்மையாக கண்டிக்கிறது.

பொரல்லை கனத்தை மையானம்கூட ஒரு முஸ்லிம் தனவந்தரினால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதை மறந்து விட வேண்டாம் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :