தலவாகலை லிந்துலை நகரசபை தலைவர்,செயலாளர் , ஊடகவியலாளர் இருவர் உட்பட 14 பேர் சுயதனிமையில்நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
லாவாலை லிந்துலை நகரசபை தலைவர் , செயலாளர், ஊழியர்கள் 10 பேர் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 14 பேர் சுயதனிமைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார காரியால வைத்திய அதிகாரி எம்.கணேஸ் தெரிவித்தார்

அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்து அவரோடு தொடர்பை பேணியவர்களை அடையாளம் கண்டு சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கையின் மேற்கொண்ட போதே போதே 22/12/2020 மாலை மேற்படி 14 பேரும் சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி அக்கரப்பத்தனை பிரதேசசபை தலைவர் சுயதனிமைப்படுத்தப்பட்டு அன்றைய தினம் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது

சுயதனிமைப்படுத்தப்ட்ட அவர் 17, 19 ஆம் திகதிகளில் கண்டி பொல்கொல்ல மற்றும் தலவாகலை பகுதியில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்

இந் நிலையில் 20/12/2020. கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 21 ஆம் திகதி மேற்கொண்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோனையிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது
இதனையடுத்து ,தொற்றுக்குள்ளான பிரதேசசபை தலைவருடன் தொடர்பை பேணியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் தலவாகலை லிந்துலை நகரசபையின் தலைவர்,செயலாளர் மற்றும் ஊழியகள் 10 பேர் அடங்களாக 12 பேரும் செய்தி சேகரிக்கச்சென்ற இரண்டு பிராந்திய ஊடகவியலாளர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கொட்டகலை பொது சுகாதர காரியால வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.கணேசன் தெரிவித்தார்
மேலும் அட்டன் டிக்கோயா நகரசபை , அம்பகமுவ,கொட்டகலை, மஸ்கெலியா,நோர்வூட், நுவரெலியா பிரதேசசபை தலைவர்கள் 21 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :