சம்மாந்துறையில் 12பேருக்கு தொற்று : நேற்று 160பேருக்கு பிசிஆர்.

சகாதேவராஜா-

ல்முனைப்பிராந்தியத்துள் வரும் சம்மாந்துறை சுகாதாரசேவைப்பிரிவில் இதுவரை 12பேருக்கு கொரோனாத் தொற்றுஏற்பட்டுள்ளது.

கிழக்கில் அதிகூடியதாக கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை சுமார் 600 பேருக்கு கொரானாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த 600க்குள் சம்மாந்துறையில் ஆக 12பேருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் அக்கரைப்பற்று கொத்தணி மூலம் தொற்றுக்குள்ளானவர்கள். கொழும்பிலிருந்து வந்தவர்களாலும் தொற்றுஏற்பட்டிருந்தது.

எனவே அந்த மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றுபவர்களாகவுமுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இதுவரை 568 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்ரிஜன் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் 121 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் 160 சலூன்கடைக்காரர்கள் மீன்விற்பனையாளர்கள் வாகனதிருத்துனர்களுக்கு சுகாதாரத்துறையினர் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டனர்.இன்றோ நாளையோ அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும்.

கிழக்கு மாகாணத்தில் முதல் கொரோனா மரணம் சம்மாந்துறையிலேயே சம்பவித்துள்ளதும் இன்னும் சட்டரீதியான உரியகருமங்கள் பூர்த்தியடையாத காரணத்தினால் அவரது பிரேதம் இன்னும் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :