ஜனாசாக்கள் எரிப்பு-சபையில் சூடான அலிசப்ரி- ரஹ்மான்!

J.f.காமிலா பேகம்-

லங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது சம்பந்தமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கை குறித்து , அமைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் விசேட நிபுணர் குழு விரைவில் கூடவுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கின்ற விவகாரத்தை விஞ்ஞான ரீதியில் பார்க்குமாறும், அதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்றும் நீதியமைச்சர் அலிசப்ரி சபையில் எதிர் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

06 மாதத்திற்கு முன்பதாக ஜனாசா எரிப்பிற்கு மாற்றீட்டை செய்யும்படி கோரியபோதும் இதுவரை பதில் எட்டவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான், ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தாவிட்டால் நீதியமைச்சர் அலி சப்ரி அல்லது தாம் உயிரிழந்தால் தங்களுடைய உடல்களும் எரிக்கப்படும் என்கிற எச்சரிக்கையை விடுத்தார் என்பது குறிப்பிட தக்க விடயம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :