கோட்டாவை கொலைசெய்ய ஜோன்ஸ்டனின் சூழ்ச்சி-போட்டுடைத்த ராஜித


J.f.காமிலா பேகம்-

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்திற்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் , மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டபோதே ராஜித எம்.பி மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :