தமிழ்க் கைதிகளின் உயிருக்கு ஆபத்து-கஜேந்திரன்


M.I.இர்ஷாத்-

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அக்கட்சியின் செயலாளரான செல்வராசா கஜேந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

“சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொற்றா நோய் காரணமாகவே பலருக்கு இந்த கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்திவருவதாக ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார்.

 அந்த வகையில் மிகவும் கொடிய சட்டமாகிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த அரசியல் கைதிகளில் பலருக்கும் இன்று நீரிழிவு நோய் உட்பட தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே அரசியல் கைதிகளின் நிலைமையை கருத்திற்கொண்டு நிபந்தயனைற்று அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அவர்களை குறைந்த பட்சம் பிணையிலாவது அவர்களை விடுவிக்க வேண்டும்” – என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :