இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
இதனால் மக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் கொரோனா வைரஸினால்தான் இந்த உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாணந்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுசம்பந்தமாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டாரவிடம் வினவியபோது, இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரை இது கொரோனா வைரஸ் மரணங்கள் எனக் கூறமுடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

0 comments :
Post a Comment