M.I.இர்ஷாத்-
கொழும்பு கல்கிசை பகுதியில் வீதியில் சென்ற நபர் திடீரென மரணமடைந்து விழுந்துள்ளார்.
பிரதேச வாசிகள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து கல்கிசை,தர்மபால வீதியை சேர்ந்த 80 வயது முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில இடங்களில் நேற்றும் இன்றும் இவ்வாறு வீதியில் மரணித்து விழுந்த நபர்கள் பற்றிய சம்பவம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கும் கொரோனா வைரசிற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment