முஸ்லிம் சமூகத்தின் சொத்து பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்- ஏ.சி.யஹ்யாகான் வாழ்த்து.

தெ
ன்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பட்டம் பெற்றுள்ளமையை - அவர் எமது சமூகத்திற்கு கிடைத்த பெரும் சொத்தாகவே பார்க்கின்றோம்.

இவ்வாறு , முகாவின் பிரதிப் பொருளாளரான ஏ.சி.எஹியாகான் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியரும் இளம் கல்விமானும் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் - எனது பிறப்பிடமான சாய்ந்தமருதை சேர்ந்தவர் எனும் போது பெருமையும் அளவற்ற ஆனந்தமும் அடைகின்றேன்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியரான - இளம் கல்விமானும் சமூக செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் - கல்வி உலகுக்கு மேலும் பல கல்வியியலாளர்களை உருவாக்கிவிடுவார் என்ற நம்பிக்கை இந்த சமுகத்திற்கு இருக்கின்றது.

கல்வி உலகில் - அவரது உயர்ச்சி மேலும் மேலும் மேலோங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என எஹியாகானின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :