ஒரு சிலரின் அசமந்தப்போக்கு எல்லோருக்கும் ஆபத்து : சபீஸ்.


நூருள் ஹுதா உமர்-

க்கரைப்பற்று மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு அவசரப்பட்டு இத்தொற்றினை பரப்புபவர்களாக இருந்துவிடாதீர்கள். அவ்வாறு ஏதாவது பொருள் தட்டுப்பாடு ஏற்படுமிடத்து உங்கள் காலடிக்கு பொருட்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏலவே நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று இப்போதும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம் என
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றின் சமகால நிலைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும்,

கொரோனா தொற்று அக்கரைப்பற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நீங்கள் அறிவீர்கள். அரசாங்க அதிகாரிகள் நேரடியாகவும் எமது சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எழுதிவந்ததை நாம் முழுமையாக ஏற்க மறுத்துவிட்டோம்
இருந்தாலும் இத்தருணத்தில் அச்சப்படாமல் பாதுகாப்பாக இருப்பது நம் கடமையாகும்

தொற்று பரவலாக்கத்தை தடுப்பதற்கு அக்கரைப்பற்றினை முழுமையாக மூடுவது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்குவதே இப்போதைக்கு சாலச்சிறந்ததாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :