தம்பலகாமம் பிரதேசத்தில் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்றையடுத்து பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் செய்தி!

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலத்துக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பிரதேசத்தில் சாரதி ஒருவருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையற்ற விதத்தில் வீட்டுக்கு வெளியில் செல்லுதல் போன்றவற்றை தவிர்க்குமாறும் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்தார்.

தம்பலகாமம் பிரதேச சபையில் நேற்று (24) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில் குறித்த பகுதியில் வாகன சாரதியான ஒருவருக்கே கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உரிய தொற்றாளரை ஈச்சிலம்பற்று முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது இதனை கருத்திற் கொண்டு பொது மக்கள் அவதானத்துடனும் சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் செயற்படவும் தேவையற்ற ஒன்று கூடல்கள், நிகழ்வுகள் போன்றவற்றையும் தவிர்த்துக் கொள்வதுடன் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பேணுமாறும் தெரிவிக்கிறேன்.

 மக்களின் பூரண ஒத்துழைப்பினை சுகாதாரப் பகுதியினர் படையினர் எதிர்பார்க்கின்றனர் கொவிட்19 தொற்றில் இருந்து இவ்வாறான முற்காப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :