மீண்டும் கொரோனா அலை பரவ காரணம் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார் - இராணுவத் தளபதி

ரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

எனவே, பொது விழாக்களை ஏற்பாடு செய்யவோ அதில் பங்கேற்கவோ கூடாது என்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றார்.

இதேவேளை எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்று கூறியதுடன், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவும், அடிக்கடி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் ராணுவத் தளபதி கூறினார்.

தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது தடையாக இருக்கும் என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :