மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழக வருடாந்த பொதுக்கூட்டம் : புதிய நிர்வாகமும் தெரிவானது.நூருள் ஹுதா உமர்-

45 வருட அனுபவம் கொண்ட மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழக வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (01) இரவு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அல்ஹாஜ் சித்திக் நதீர் திறந்த வெளி அரங்கில் விளையாட்டு கழக ஸ்தாபகரும் ஓய்வு பெற்ற மாவட்ட காணிப்பதிவாளருமான ஜமால் முகம்மட் அவர்களின் நெறிப்படுத்தலில் இடைக்கால தலைவரும், கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முகர்ரப் தலைமையில் நடைபெற்றது.

கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2020/2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் அதீயுயர் பீட உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டது.

தவிசாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ. ரைசூல் ஹாதியும், உயர்பீட தலைவராக மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் உப அதிபர் பைலுள் ரஹ்மானும், தலைவராக தொழிலதிபர்
எம்.கே.வி.எம். ஜஃபரும், செயலாளராக ஆசிரியர் ஏ.எம். றியாஸும், பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் கலில் முஸ்தபாவும் மற்றும் பல கிளை முகாமைத்துவ நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சங்க பிரதித்தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை சன்னிமெண்ட் விளையாட்டு கழக செயலாளர் பதவியை 40 வருடங்களாக அலங்கரிக்கும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். மனாப் மற்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழக முன்னாள் தலைவர் வை.கே ரஹ்மான், அம்பாறை மாவட்ட நடுவர் சங்க தலைவர் எம்.பி.எம்.ரஷீத் ஆகியோருக்கு பொன்னாடை போத்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மீயுயர் பீட செயலாளரும் கழக பேச்சாளருமான எம்.ஐ.எம். வலித், கழகம் இனிவரும் காலங்களில் விளையாட்டுடன் மட்டுமல்லாது பாரியளவிலான சமூக நல வேலைத்திட்டங்களும் செய்ய ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

கௌரவ அதிதிகளாக அரச காரியாலயங்கள் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரச நிர்வாக சேவை மூத்த அதிகாரிகள், அரச கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரிகள், கல்விமான்கள், விளையாட்டு வீரர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :