குடிவரவு, குடியகல்வு மற்றும் ஆட்பதிவுத் திணைக்களங்களின் பொதுமக்கள் சேவை இடைநிறுத்தம்



மினுவாங்கொடை நிருபர்-
கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, அக்டோபர் 12 முதல் 16 வரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான அலுவலக நேரங்களில் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது, மின்னஞ்சல் ஊடாகவோ உரிய பிரிவுகளுடன் தொடர்புகொள்ளுமாறும், அவர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
இதேவேளை, (12) திங்கட்கிழமை முதல் (16) வெள்ளிக்கிழமை வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, 011 5226126,
011 5226115,
011 5226100,
011 5226150 இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறும், ஆட்பதிவுத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :