பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா பரவியமைக்கான காரணத்தை வெளியிட்ட வைத்திய அதிகாரி

 ஐ. ஏ. காதிர் கான்-


பேலியகொடை, மீன் விற்பனை நிலையத்தில் கடந்த நான்கு நாட்களில் 471 பேர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான நிலையில், அது ஐந்து மடங்கு அதிகரிப்பு என, கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் தற்போதைய கொவிட் - 19 நிலைமை தொடர்பில், (24) சனிக்கிழமை காலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலைமையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும், பேலியகொடை, மீன் விற்பனை நிலையத்தில் வைரஸ் இலகுவில் பரவுவதற்கு, குளிரூட்டும் நிலைமை அதிகரித்துக் காணப்பட்டமையே பிரதான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் - 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை, 7153 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக, (23) வெள்ளிக்கிழமை 865 பேர் தொற்றுடன் இனம் காணப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

865 பேர் (23) அடையாளம் காணப்பட்ட நிலையில், அது ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :