ஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் இடைநிறுத்தம்!

ட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையையடுத்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக பிரதான அலுவலகமும், மாகாண அலுவலகங்களும் நாளை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இருப்பினும் உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெறவிரும்புவோர் பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்கள பிரிவுகளில் அல்லது பிரதான அலுவகங்களுடன் தொடர்புகொண்டு விசாரிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0115 226 150 அல்லது 0115 226 115 தொலைபேசி இலக்கங்கள் ஊடக தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :