பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) , களுவாஞ்சிகுடியில் இன்று இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வின் போது சுவீடன் நாட்டினால் உலகெங்கிலுமுள்ள பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட Stochholmunior Water Prize 2020 எனும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள இப்பாடசாலை உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களான ரீ.தினோஜன் , கே.அபினயா மற்றும் இம்மாணவர்களுக்கு பயிற்ச்சி வழங்கிய இப்பாடசாலை இரசாயனவியல் ஆசான் எஸ்.தேவகுமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் எம்.சபேஸ்குமார் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இப்போட்டியில் சர்வதேச ரீதியில் 257 நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இவற்றில் 24 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆசியா கண்டத்திலிருந்து இறுதிப் போட்டிக்கு இப்பாடசாலை மாணவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும்.
கடந்த 30 வருடமாக சுவீடன் நாட்டினால் இப்போட்டி நடத்தப்பட்ட போதிலும் இறுதிப் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு பாடசாலை மாணவர்களும் இதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :