J.f.காமிலா பேகம்-
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்கள் இடையே கொரோனா தொற்று விரைவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.
இந்நிலையில் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த சங்கம், மேலதிக அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் கூறுகின்றது.
இதேவேளை, கட்டுநாயக்க உட்பட ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளிலும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதியை பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இருந்த போதிலும் அதிகளவு மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சி செய்திருக்கும் சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
0 comments :
Post a Comment