அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் முன்னிலையில் நாளை இடம்பெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையை முன்னிட்டு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் கலந்து கொண்டு, கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் உள்ளிட்ட ஆவணங்களையும் மற்றும் சான்றாதாரங்களையும் முன்வைத்து, கல்முனையின் சரியான வடக்கு எல்லை தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ரி.கே.அதிசயராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் உட்பட அதிகாரிகள், கிராம சேவகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
நாளைய பேச்சுவார்த்தையில் கல்முனைத் தரப்பானது, தமது வடக்கு எல்லை எது என்பதற்காக முன்வைக்க வேண்டிய நியாயங்கள், அவற்றுக்கான ஆவணங்கள் தொடர்பில் இதன்போது கூடிய அவதானம் செலுத்தப்பட்டு, தயார்படுத்தல்களுக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment