M.I.இர்ஷாத்-
நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் சார்ந்த ஊழியர்கள் தற்சமயம் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் முகாமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய நபர் இறுதியாக கடந்த 02ஆம் திகதி தொழிலுக்குத் திரும்பியிருந்ததாக அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment