மீனில் கொரோனா என்ற கருத்து தொடர்பில் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்.!

ன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :