ரியாஜ் பதியுதீன் சி.ஐ.டி.யினரால் விடுவிக்கப்பட்டமையானது நியாயமற்றது- சட்டமா அதிபர் கண்டனம்!

யிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் தற்கொலை தாரி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சி.ஐ.டி.யினரால் விடுவிக்கப்பட்டமையானது நியாயமற்றது என சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ரியாஜ் பதியுதீன் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை அதிகாரி உள்ளிட்ட சி.ஐ.டி. உயர் அதிகாரிகளை இன்றையதினம் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழைத்து, விசாரணை கோவைகளை பரிசீலித்த போது அவர் விடுவிக்கப்பட்டமை நியாயமற்றது என தெளிவானதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷரா ஜயரத்ன தெரிவித்தார்.

இன்றைய தினம் சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, சி.ஐ.டி. பணிப்பளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார ஆகியோர் சட்ட மா அதிபரை, அவரது ஆலோசனைக்கு அமைய சந்தித்தனர்.

இதன்போது ரியாஜ் பதியுதீன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை கோவையை பரிசீலித்த சட்ட மா அதிபர், அது பூரணமற்றது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யவும் சி.ஐ.டி. பிரதானிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை தாரி இன்சப் அஹமட்டுக்கும் ரியாஜ் பதியுதீனுக்குமிடையே இருந்த 7 தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியே அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஏப்ரல் 17 மற்றும் ஜூலை 13 ஆகிய திகதிகளில் சிஐடியின் பொறுப்பு வாய்ந்த டி.ஐ.ஜி யிடமிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் ரியாஜ் பதியுதீனை விசாரிக்க வேண்டாமென தடுப்பு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

ஒக்டோபர் 13 ஆம் திகதி காலாவதியாகவிருந்த ரியாஜ் பதியுதீன் கைது தொடர்பான விசாரணையை முடிக்குமாறு சிஐடி செப்டம்பர் 6 ஆம் திகதி டிஐஜி நுவான் வெதசிங்கிற்கு உத்தரவிட்டது. நுவான் வெதசிங்கரின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 30 ஆம் திகதி ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

சிஐடி பிரதானி நுவான் வெதசிங்க மற்றும் சிஐடி இயக்குனர் எஸ்எஸ்பி பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் ரியாஜ் பதியுதீனை விடுவிப்பது தொடர்பான விசாரணையை இடைநிறுத்தியுள்ளனர், மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தேவை. தற்போதுள்ள திறனும் பலவீனமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி, விசாரணையை நிறுத்தி, ரியாஜ் பதியுதீனை விடுவிப்பதற்கான சிஐடியின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.தெரண
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :