ஹோமாகமையில் சோகம்!



J.f.காமிலா பேகம்-
கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட பெண்ணொருவரை , மக்கள் சுகாதார அதிகாரி வைத்தியசாலையில் அனுமதித்ததை தொடர்ந்து, அவரது விசேட தேவையுடைய மகன் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஹோமாகமை தோலஹேன- ஹரித என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண் ஹோமகமை மீன்சந்தையில் மீன் வாங்கி உள்ளார்.பின் கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பதன் காரணமாக, களுபோவிலை வைத்தியசாலையில் (30) நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசேட தேவையுடைய 25 வயதுடைய மகனுடன் தனிமையில் வீட்டில் இப்பெண் வசித்து வந்துள்ளார்.தனது தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்வதை அறிந்து அதிர்ச்சியுற்ற நிலையில், வீட்டினுள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், என பிரதேச வாதிகள்தெரிவித்தனர்.
இதேவேளை இந்த விசேட தேவையுடைய பிள்ளை சம்பந்தமாக பொது சுகாதார வைத்திய அதிகாரி அலட்சியமாக நடந்து கொண்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :