கொரோனா பரிசோதனையில் ஒரே நாளில் 5000 பேருக்கு கொரோன!

இந்தியா-பெங்களூருவில் மட்டும் ஒரேநாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 57 ஆயிரத்து 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 947 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 113 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,574 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 121 பேர், பல்லாரியில் 258 பேர், பெலகாவியில் 186 பேர், பெங்களூரு புறநகரில் 189 பேர், பெங்களூரு நகரில் 5,000 பேர், பீதரில் 57 பேர், சாம்ராஜ்நகரில் 104 பேர், சிக்பள்ளாப்பூரில் 115 பேர், சிக்கமகளூருவில் 186 பேர், சித்ரதுர்காவில் 217 பேர், தட்சிண கன்னடாவில் 447 பேர், தாவணகெரேயில் 141 பேர், தார்வாரில் 154 பேர், கதக்கில் 72 பேர், ஹாசனில் 471 பேர், ஹாவேரியில் 57 பேர், கலபுரகியில் 180 பேர், குடகில் 103 பேர், கோலாரில் 104 பேர், கொப்பலில் 98 பேர், மண்டியாவில் 207 பேர், மைசூருவில் 979 பேர், ராய்ச்சூரில் 129 பேர், ராமநகரில் 77 பேர், சிவமொக்காவில் 203 பேர், துமகூருவில் 250 பேர், உடுப்பியில் 209 பேர், உத்தரகன்னடாவில் 462 பேர், விஜயாப்புராவில் 73 பேர், யாதகிரியில் 98 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 55 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், ஹாசனில் 5 பேர், மைசூருவில் 9 பேர், கொப்பலில் 5 பேர், துமகூருவில் 5 பேர், உத்தர கன்னடாவில் 7 பேர் உள்பட 113 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 1 லட்சத்து 4 ஆயிரத்து 348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 55 லட்சத்து 24 ஆயிரத்து 302 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

ஒரேநாளில் 9,832 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 16 ஆயிரத்து 153 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 841 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :