20ஐ ஆதரிக்க 600 மில்லியன் ரூபா கேட்டு ஏமாற்றம் அடைந்த எம்.பி- அம்பலமான தகவல்

J.f.காமிலா பேகம்-

20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 600 மில்லியன் ரூபா கேட்டு வாக்களித்த பின் ஏமாற்றம் அடைந்த எம்.பி ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய தினத்தில் நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்திற்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிராகவே வாக்களிக்க இருந்தார்.

எனினும் அமைச்சர்கள் இருவர் அவருடன் சமரச பேச்சு நடத்தியபோது குறித்த எம்.பி 600 மில்லியன் ரூபாவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் வாக்களித்த பின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உறுப்பினர்களுக்கு பரீட்சயமான கழிவறை ஒன்றுக்கு வர கூறியுள்ளனர்.

குறித்த எம்.பியும் ஆதரவாக வாக்களித்து சொன்ன இடத்திற்கு போயுள்ளார்.

எனினும் சமரசம் பேசிய அமைச்சர்கள் வரவில்லை. இன்று வரை அந்த கொடுப்பனவு பற்றி குறித்த எம்.பி அந்த அமைச்சர்களிடம் நினைவுபடுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே மாத்தறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வணக்கத்துக்குரிய முருத்தொட்டுவே ஆனந்த என்ற பிக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சியை சேர்ந்த இந்த அரசியல்வாதி 20ஆவது திருத்தத்திற்கு எதிராக பலமுறை கருத்து தெரிவித்தவர் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :