மக்கள் வங்கி இந்து மா மன்றத்தினால் திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெருமதியான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (05) அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஐ.எஹியா தலைமையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உதவிப் பொது முகாமையாளர் ஆர்.ரவிகரன் மற்றும் பிராந்திய முகாமையாளர் கபில திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு திராய்க்கேணிஅரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் எம்.சண்டேஸ்வரனிடம் போட்டோ கொப்பி இயந்திரத்தை கையளித்து வைத்தனர்.
மேலும் நிகழ்வில் பிரதி முகாமையாளர்களான எஸ்.எம்.ஏ.ஜவாத், பி.விஜிதா, அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். நபீல், அம்பாறை மாவட்ட இந்து மாமன்ற இணைப்பாளர் ஏ.சுந்தரராஜன் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment