பயணிகளின் எண்ணிக்கை குறைவடைவால் 16 ரயில் சேவைகள் இடை நிறுத்தம்

ஐ. ஏ. காதிர் கான்-
ல்வேறு ரயில் மார்க்கங்களில் 16 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால், பொதுமக்களுக்கு மீண்டும் அறிவிக்கும் வரையில் சில ரயில் சேவைகள் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிணங்க, புத்தளம் ரயில் மார்க்கத்தினூடான நாளாந்த 8 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
களனி ரயில் மார்க்கத்தில் இரண்டு நாளாந்த ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என, ரயில்வேக் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, பிரதான ரயில் பாதையின் யட்டகொட முதல் கொழும்பு - கோட்டை வரையான பகுதிகளிலும், புத்தளம் முதல் கொழும்பு வரையான பகுதிகளிலும், கடலோர ரயில் பாதையில் பென்தொட முதல் கொழும்பு வரையான பகுதிகளில் பயணிக்கும் ரயில்களும் நிறுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருதானை மற்றும் தெமட்டகொடை ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

இருப்பினும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காகவும், பரீட்சை அதிகாரிகளுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரயில் மற்றும் விசேட ரயில்களைத் தவிர்த்து ஏனைய ரயில்கள் எந்த வொரு நிலையங்களிலும் நிறுத்தப்பட மாட்டாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :