கடற்கரையில் வாக்குவாதத்தில் ஒருவரை அடித்துக்கொலை செய்தவருக்கு 15 வருட கடூழிய சிறை

எப்.முபாரக்-

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் கடற்கரையில் லைன் கயிறு வாக்குவாதத்தில் அடித்துக்கொலை செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை செவ்வாய்கிழமை(20) வழங்கியுள்ளார்.

இவ்வாறு 15 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் கிண்ணியா- தாமரவில் பகுதியைச் சேர்ந்த நூர் முஹம்மது நியாஸ் (39 வயது) எனவும் தெரியவருகின்றது.

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி கிண்ணியா- விமானப்படை முகாமிற்கு அருகில் அப்துல் வகாப் சகீட் என்பவர் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த லைன் கயிற்றை திருடியதாக அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவரை அடித்து கொலை செய்தனர்.

இதன் மூலம் முதலாம் எதிரியாகிய கிண்ணியா-03 வட்டாரத்தைச் சேர்ந்த தாமரவில் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நூர் முஹம்மது நியாஸ் என்பவருக்கும் கிண்ணியா , 3 ஆம் வட்டாரம் ஜித்தா நகர் பகுதியைச் சேர்ந்த சவூர்தீன் அஷ்ரப் என்பவருக்கும் எதிராக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 32 உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய தண்டனை சட்டக்கோவை பிரிவு 296 இன் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 297 இன் ஆட்கொலை புரிந்த குற்றச்சாட்டு மன்றினால் குறைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 297 தண்டனைச் சட்டக்கோவையின் கீழான குற்றச்சாட்டிற்கு முதலாம் எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உள்ளார் என மன்று தீர்ப்பளித்துள்ளது.

பிரிவு 297 தண்டனைச் சட்டக்கோவை குற்றச்சாட்டு வழக்குத் தொடுநர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எதிரிக்கு எதிராக என் பிடித்துள்ளார் என மன்று தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி கிண்ணியா கடற்கரை பகுதியில் அப்துல் வஹாப் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக 15 வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும், அரச செலவாக 25,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும், அப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :