கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான குழுவின் முதலாவது கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக முதல்வர், பிரதி முதல்வர் உட்பட அனைத்துக் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 16 உறுப்பினர்களையும் மாநகர ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை கடந்த மாத சபைக் கூட்டத்தின்போது மாநகர முதல்வர் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினர் மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்ட அறிக்கை மாநகர சபையின் பொதுச் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment