J.f.காமிலா பேகம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், இன்று(14) பிற்பகல் 3 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் செயற்குழுவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ருவன் விஜேவர்தன ரணிலின் உறவினர் என்பதால், பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி தெரிவாகலாம் எனவும் பலர் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை, முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment