கல்முனை பிரதேச செயலக விளையாட்டு பெருவிழா..



சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடைபெறும் விளையாட்டு பெருவிழா இன்று(05) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அல்ஹாஜ் வை.ஹபிபுல்லா தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியாக கல்முனை சனிமோன்ட் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் மோதின இதில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 2ற்கு 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று 2020ம் ஆண்டுக்கான கல்முனை பிரதேச செயலக உதைபந்தாட்ட சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள்.இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்

நிகழ்வின் கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப், மற்றும் விசேட அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அமீர் அலி,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன்பாவா,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முக்கரப்,நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,எம்.ஐ.ஏ ரகுமான்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் ஹசன்,விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம் அஸ்வத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :