தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மருதமுனை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று (04.09.2020) மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலில் அதன் தலைவர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். மௌலானா தலைமையில் நடைபெற்றது.
இங்கு மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், நான் எப்போதும் நேசிக்கும் மருதமுனை வாழ் மக்களுக்கு எனது நன்றிகள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் எனக்கும் எமது தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கும் கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காமல் நமக்காக பிரார்த்தனை செய்த மக்கள் மற்றும் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்ற நமது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உண்மையை உணர்ந்து வாக்களித்த சகல மக்களுக்கும் இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான ஏ.எல் றிபாஸ், மாற்றத்துக்கான முன்னணியின் ஸ்தாபகர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளம் வேட்பாளருமான, ஏ எம்.சலீம், டாக்டர் உதுமாலெப்பை உட்பட கட்சியின் பிரமுகர்கள், உலமாக்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விசேட துஆ பிராத்தனையை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் பேஸ் இமாம் ஏ.ஆர்.எம்.ஜெரிர் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment