கொரோனா தொற்று பரவும் அனர்த்தம் குறைவடையவில்லை.!

ஐ. ஏ. காதிர் கான்-

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களினால் கொவிட் - 19 தொற்று, நாட்டுக்குள் பரவும் அனர்த்தம் குறைவடையவில்லை என்று, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அனைவரும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,
விசேடமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொவிட் தொற்றுத் தாக்கம் இருப்பதைக் காணமுடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நாடுகளில் இருந்தும் இலங்கை வருவோருக்கு இந்தத் தொற்று இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நோய் சமூகப் பரவலாகக் காணப்படவில்லை. இருப்பினும், நாட்டுக்குள் கொவிட் தொற்று பரவுவது குறைவடையவில்லை. 

எம்மை மீறிய வகையில் இந்த நோய்த் தொற்று அனர்த்தம் இடம்பெறுமாயின் அதாவது, சமூகத்தின் மத்தியில் கொவிட் தொற்றாளர் ஒருவர் இருப்பாராயின், அது சமூகப் பரவலாக மாறக்கூடும் என்றும் தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :