புதிதாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் சிரமதான நிகழ்வு கிண்ணியாவில் இடம் பெற்றது.
குறித்த சிரமதான நிகழ்வானது இன்று (04)கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பிரதேச செயலக வளாகம் இதன் போது சுத்தம் செய்யப்பட்டது. புதிய நியமனங்களை பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் இணைந்து இதில் ஈடுபட்டார்கள்.
டெங்கு அற்ற தேசத்தை உருவாக்கவும் நாட்டின் தேசியத்துக்கு சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்றவும் இச் சிரமதான நிகழ்வு எடுத்துக்காட்டப்படுகிறது.
இதில் புதிய பட்டதாரி பயிலுனர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment