சாய்ந்தமருதில் இடம்பெற்ற இரு விபத்துக்கள் : ஒருவர் பலி!மற்றொருவர் கவலைக்கிடம்!


நூருள் ஹுதா உமர்-


ல்முனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட சாய்ந்தமருதில் ரெட்சிலிக்கு அருகாமையில் நேற்றிரவு இரு மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் நால்வர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதில் கல்முனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மற்றொருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.

இதே சமயம் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் முச்சக்கர வண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :